Contact Form

Name

Email *

Message *

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உத…

Image
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இதனடிப்படையில் அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 வாக்களிப்பு நிலையங்களாக அம்பாறைத் தொகுதியில் 160 நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 87 நிலையஙகளும், கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 464 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக அலுவலர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார். 

You may like these posts