Contact Form

Name

Email *

Message *

யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

அம்பாறை, தாண்டியடி பிரதேசத்தில் யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக், எதிர்வரும…

Image
அம்பாறை, தாண்டியடி பிரதேசத்தில் யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று செவ்வாயக்கிழமை (07) உத்தரவிட்டார்.

குறித்த யுவதியின் பெற்றோர், நேற்று (07) வைத்தியசாலைக்கு சென்ற வேளையில் வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியிடம் அலைபேசி இலக்கத்தை தனக்கு அனுப்புமாறு குறித்த நபர் கேட்டுள்ளார்.

அலைபேசியின் இலக்கத்தை வழங்க மறுத்த யுவதியின் வீட்டுக்குள் நுழைந்த அயல் வீட்டு இளைஞன், யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த யுவதி திருக்கோவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரை பொலிஸார் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக் முன்ணிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

You may like these posts