Contact Form

Name

Email *

Message *

கிழக்கு மாகாண அமைச்சுகளில் 2,765 வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண முதலமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றில் 2 ஆயிரத்து 765 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலா…

Image
கிழக்கு மாகாண முதலமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றில் 2 ஆயிரத்து 765 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,  09.05.2017 நேற்று தெரிவித்தார்.


இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்; அவர் கூறினார். கிழக்கு மாகாண முதலமைச்சில் 331 வெற்றிடங்களும் சுகாதார அமைச்சில் 341 வெற்றிடங்களும் விவசாய அமைச்சில் 558 வெற்றிடங்களும் கல்வி அமைச்சில் 1,535 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.

இது தொடர்பான ஆவணங்கள் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டால், நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறன் மற்றும் விளைதிறனுடையதாக கொண்டு நடத்துவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 4,784 ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு பல போராட்டங்களுக்குப் பின்னர், முகாமைத்துவத் திணைக்களம் அனுமதியளித்துள்ளமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த முதலமைச்சர், ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை துரிதகதியில் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

You may like these posts

Comments