Contact Form

Name

Email *

Message *

துயர் பகிர்வோம்.. திரு.சிவபாதசிங்கம்(ஆசிரியர்,சட்டத்தரணி)

வடக்கிலே சரவணையில் பிறந்து கிழக்கிலே தம்பிலுவிலில் புகுந்து சீரும் சிறப்புடனும் வாழ்ந்திருந்த நல்லாசிரியர் திரு.சிவபாதசிங்கம் அவர்கள்.இவர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆஸ்திரேல…

Image
வடக்கிலே சரவணையில் பிறந்து கிழக்கிலே தம்பிலுவிலில் புகுந்து
சீரும் சிறப்புடனும் வாழ்ந்திருந்த நல்லாசிரியர் திரு.சிவபாதசிங்கம் அவர்கள்.இவர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா சென்று
குடியேறினார். அங்கு குடும்பத்துடன் மிக சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தவர், ஒரு வருடத்திற்கு முன்னர் எதிர்பாராதவிதமாக
நோய்வாய்பட்டார்.ஆஸ்திரேலியா மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்றுவந்த திரு.சிவபாதசிங்கம் அவர்கள், நலன்பெற்று,நல்ல குணமடைந்து வீடு திரும்ப இருந்த சமயம், திடீரென
உடலியக்கம் பாதிக்கப்பட மீண்டும்  சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால்
துர்ரதிஷ்ட வசமாக சிகிச்சை பலனின்றி இறுதியில் மரணத்தை சந்தித்து
கொண்டார்.
கடந்த 13.02.2012 அன்று அன்னாரின் உயிர் பிரிந்தது.அவருடைய இறுதி
கிரிகைகள் ஆஸ்திரேலியாவிலே மிக நேர்த்தியாகவும்,சகல சம்பிரதாயங்களுடனும் உறவுகளும்,நண்பர்களும் புடைசூழ சிறப்பாக
நடந்ததாக அவரது குடும்பத்தினர் மூலம் எமது இணையத்தளத்திற்கு
தகவல் கிடைத்தது.மிக தாமதமாகவே இந்த தகவல் கிடைத்ததால் உரிய
நேரத்திற்க்கு இவரது இழப்புபற்றி தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது.

திரு. சிவபாதசிங்கம் அவர்கள் யாழ்/சரவணையை சேர்ந்த காலம்சென்ற திரு.தம்பையா,திருமதி.முத்தாச்சி அவர்களின் அன்பு மகனும்,காலம் சென்ற
   திரு. ஐயம்பிள்ளை.பேரம்பலம்
ஆசிரியர்,திருமதி.மங்கையற்கரசி.பேரம்பலம் ஆகியோரின் அன்பு மருமகனும்,திருமதி.இராஜாம்பிகை(அம்பிகை டீச்சர் )அவர்களின் அன்பு
கணவரும்,திருமதி.வனஜா விஜயன்,செல்வி.மயூரதி,ஆகியோரின் அன்பு
தந்தையும்,திரு.விஜயன்.செல்வரத்தினம் அவர்களின் மாமனாரும்,காலம் சென்ற இராஜேஸ்வரன்,கனடாவிலிருக்கும் திருமதி.ஜெகதாம்பிகை.வாமதேவன் திருமதி.அமிர்தாம்பிகை.ஜெயகுமார் இலங்கையில் இருக்கும்
திரு.ஜெகதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,செல்வி ஆரியாலக்ஸ்மி
அவர்களின் பேரனும் ஆவார்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எம் உறவுகளின் சார்பிலும்,எமது ஊரவர்களின் சார்பிலும் எமது இணையத்தளம் துயரினை பகிர்ந்து கொள்கிறது.

You may like these posts

Comments