கௌரவ ஜனாதிபதி அவர்களினால் நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல அரச உத்தியோகத்தர்களும் உடல்உள ரீதியாக சிறந்த ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற நோக்கில் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்திலும் கடந்த 06.02.2017 திங்கள் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது திருக்கோவில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!