
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் கிராம பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் சாகாமம் குளத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் மற்றும் சாகாமம் குளத்தில் மீன் வளப்ர்பை விரிவுபடுத்தி, மக்களின் மீன்பிடிதொழிலை ஊக்கப்படுத்துவதன் ஊடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த சாகாமம் குளத்திற்கு கௌரவ அமைச்சர் தயா கமக்கே அவர்களும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு குழுவினரும் 09.02.2017 இன்று வியாழக்கிழமை நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர் .
இவ் விஜயத்தின் போது சாகாமம் கிராம கிராம அலுவலர் திரு.எஸ்.பார்த்தீபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் இங்கு அமைச்சர் அவர்களும் மற்றும் வெளிநாட்டு குழுவினரும் பொது மக்களுடம் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு அவற்றினை நிவர்த்திசெய்வதற்கான வழிவகைகளை மேற்கொவதாக கூறினார்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!