
சைவ மெய்யடியார்களினால் கொண்டாடப்படும் தைப்பூசப் திருநாள் பெருவிழா நிகழ்வானது வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் கடந்த 09.02.2017 வியாழக்கிழமை அன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது .
இவ் தைப்பூசப் திருநாள் பெருவிழாவின் போது காலை 10.00 மணி முதல் பாற்குடபவனி, பால் அபிஷேக நிகழ்வும் தொடர்ந்து ஸ்நபன ஹோமமும், அபிஷேகமும் தொடர்ந்து விசேட அலங்கார பூஜையும் இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணி முதல் திருவிளக்குப் பூஜையும், தொடர்ந்து வசந்த மண்டப அலங்கார பூஜையும், சுவாமி உள்வீதி உலா வருதலும் இடம் பெற்று அனைத்து நிகழ்வும் நிறைவுற்றது.
இதன்போது ஏராளமான மக்கள் பல பகுதிகளிலும் இருந்து இவ் பால்குடபவனி நிகழ்விலும் மற்றும் திருவிளக்குப் பூஜை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!