தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் தேவஸ்தான புதிய ஆலயத்திற்கான கோமுகை பிரதிஸ்ட விழா நிகழ்வானது கடந்த வியாழன் அன்று ஆலய பிரதமகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ.சற்குணராசா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.இநிகழ்வானது முனையூர் வேப்பையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி நடைபவனியாக தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயம் சென்று பூஜைகள் இடம்பெற்று பிரதிஸ்ட நிகழ்வு இடம்பெற்றது . இதன்போது ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.









Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!