Contact Form

Name

Email *

Message *

கால தாமதமாகவரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் - பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்

இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

Image
இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதன் பின்னர் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாதென்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனியார் பரீட்சார்த்திகளை தமது விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

செயல்முறை பரீட்சை அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

You may like these posts

Comments