Contact Form

Name

Email *

Message *

எமது பிரதேச இளைஞனால் விதை நடு கருவி கண்டுபிடிப்பு - வாழ்த்துக்கள்.

(Photos:Satheeswaran) தம்பிலுவில் -02   சிவன் கோவில் வீதியை   சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரத…

Image
(Photos:Satheeswaran) தம்பிலுவில் -02  சிவன் கோவில் வீதியை  சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரதேசத்தில் 12.11.2016 சனிக்கிழமை நடைபெற்றதுடன், குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், விவசாயத் திணைக்களத்தின் போதனாசிரியர் தர்சினி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அவதானித்தனர்.   


இவரின் புதிய கண்டுபிடிப்பை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு தானாகவே விதை நடும் முதலாவது கருவியை உருவாக்கிய இவர், தற்போது மின்சாரத்தின் உதவியுடன் விதைகளை நடும் கருவியை உருவாக்கியுள்ளார். இந்த இயந்திரத்தின் மூலம் மணித்தியாலத்துக்கு 03 ஏக்கரில் விதைகளை நட முடிவதுடன், ஒரே நேரத்தில் 4 நிரல்களில் நடக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு தடவையில் 8 கிலோகிராம் தானியங்களை கொள்ளவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 15 ஏக்கர் நிலங்களில் விதைகளை நட முடியும். இந்த இயந்திரத்தின் பின்புறம் உள்ள சக்கரமானது விதையை விதைக்கின்ற இடைவெளியை நிர்ணயிப்பதுடன், தானகவே மடுக்களை தோண்டி தானியங்களை இட்டு மூடி அவ்விடத்தை அமர்த்தி விதைகளை நடும். 

சோளம்;, பயறு, கௌப்பி, நிலக்கடலை போன்ற மேட்டு நிலப்பயிகளுக்கான விதைகளை நடமுடிவதுடன் குறிப்பாக குறைந்தளவு நேரத்தில் கூடிய நிலப்பரப்பில் விதைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக வடிவமைப்பாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் தெரிவிக்கின்றார்.


இவரது கண்டுபிடிப்பு உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைய எமது இணையக்குழு தம்பிலுவில்.இன்போ thambiluvil.info சார்பான மணமார்ந்த வாழ்த்துக்கள். 


இதை உங்கள் நண்பர்களுக்கும் தேரியப்படுத்த பகிருங்கள். Share this































முதலாவதாக தயாரித்த இயந்திரம் 2015இல்



You may like these posts

Comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!