Contact Form

Name

Email *

Message *

தேசிய பாடசாலையின் OSA இன் O/L மாணவர்களுக்கான இறுதி நாள் கருத்தரங்கு

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் தேசிய பாடசாலையின் 2016 இவ்வாண்டில் (O/L) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் ம…

Image
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் தேசிய பாடசாலையின் 2016 இவ்வாண்டில் (O/L) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ, மாணவிகளுக்காக பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கானது கடந்த 05.11.2016 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதி நாளான 13.11.2016 ஞாயிறு நேற்று விஞ்ஞானப்  பாடத்திற்கான செயல்முறை பரீட்சைக்கான  கருத்தரங்கானது நடைபெற்றது.


இன்நிகழ்வின் போது அதிதிகளாக தேசிய பாடசாலையின் அதிபர் திரு.V.ஜெயந்தன் அவர்களும், பழைய மாணவர்சங்கத்தின் செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு  உறுப்பினர்களான கே.சுதாகரன், எஸ்.பார்த்தீபன், என்.எ.லோஜன், ரி.டினுராஜ்,  தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் விஞ்ஞானப்  பாடத்திற்கான செயல்முறை பரீட்சைக்கான கருத்தரங்கு வளவாளராக A.L. றிஸ்வான்  கலந்து கொண்டார்.

இக் கருத்தரங்கானது ஆர்.என் சீடி கோம் (RN CD Home) தம்பிலுவில், செல்வம் கென்செட்சன்( Selvam Construction) தம்பிலுவில் ,றோஜித் நகைத்தொழிலகம்(Rojith Gold House) தம்பிலுவில், சனோ அக்றோ கெமிகல்ஸ்(Sano Agro Chemical)  தம்பிலுவில் ஆகிய  அனுசரனையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.



























You may like these posts

Comments