Contact Form

Name

Email *

Message *

இன்றையதினம் நிலவு, பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றவுள்ளது

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை 14.11.2016 ஆம்   இன்றையதினம் வானில்  திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியு…

Image
பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை 14.11.2016 ஆம்  இன்றையதினம் வானில் திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும்.
‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948 ஆம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது காட்சியளிக்கவுள்ளது என சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது, இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48,000 கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.
வானத்தில் சாதாரணமாக பௌர்ணமி அன்று நிலவை காண்பதை விட பல மடங்கு மிகப்பெரியதாக காட்சியளிக்கும் அந்த நேரத்தில் அதன் வெளிச்சம் 30 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

You may like these posts

Comments