Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் இரண்டு வருட சேவை ஆண்டு பூர்த்தி நிகழ்வு

[BY- NR] தேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவினையும் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளையின் 2வது ஆண்டு நிறைவும் முன்னிட்டு 28.03.2017 செவ்வாய்க்கிழமை…

Image

[BY- NR]

தேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவினையும் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளையின் 2வது ஆண்டு நிறைவும் முன்னிட்டு 28.03.2017 செவ்வாய்க்கிழமை நேற்றைய தினம் பரிசில் வழங்கும் நிகழ்வும் மற்றும் தேனீர் விருந்துபசார நிகழ்வும் வங்கி முகாமையாளர் திரு ஏ. அன்ராடோ தலைமையில்  தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அத்தியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி  டாக்டர் M.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத் ஆகியோரும் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் ஓய்வுபெற்ற முகாமையாளர் திரு.விவேகானத்தராஜா மற்றும் தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அதிபர் திரு.வ.ஜயந்தன், மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக வெளிநாட்டில் இருந்து பணம் பெறும் சேவையில் குலுக்கல் முறையில்  தொலைக்காட்சிப்பெட்டியினை  வென்ற தம்பிலுவிலை சேர்ந்த திருமதி பர்மிலா அவர்களுக்காக பரிசிலும் வழங்கப்பட்டதோடு திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வருடம் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்க  ளான மாணவர்களுக்கான  சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், புதுவருட சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு வைத்த வாடிக்கையாளர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

















You may like these posts

Comments