திங்கட்கிழமை 10.07.2017 திகதி இன்றையதினம் திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் இணைந்து எமது சூழலினை, சுற்றாடலினை தூயிமையாக பேணுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது மக்கள் தாம் வாழும் சுற்றுப்புறச் சூழலின் சுத்தம் மற்றும் தூய்மையினை தொடர்ச்சியாக பேணவேண்டியதன் முக்கியத்துவத்தினை பொதுமக்கள் மற்றும் மாணவ சமூகத்தினரிடையே ஏற்படுத்துவதை புலப்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இவ் விழிப்புணர்வு பேரணியினை மேற்கொண்டனர். மேலும் இப் பேரணி சென்ற பாதைகளின் இருமருங்கிலும் காணப்பட்ட சூழலுக்கு பெரும் மாசினை ஏற்படுத்தும் பொலித்தின் கழிவுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சுத்தம் செய்தவாறு இப் பேரணியினை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.











Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!