வீதி ஒழுங்கு விதிகளை மீறலுக்காக விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிப்பதற்கு வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை கவனம் செலுத்தியுள்ளது.
வீதிச் சட்டங்களை பதுப்பிக்கும் நோக்கிலான வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டார்.
வீதி ஒழுங்குகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் நிகழ்காலத்திற்குப் பொருத்தமற்ற வகையில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டங்கள் 1960 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்டவை என்பதால், அவற்றை நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மேலும் கூறினார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!