Contact Form

Name

Email *

Message *

இன்று முதல் முறையாக பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று, முதல் முறையாக அரசியலமைப்புச் சபையாக கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இன்று (05) பிற்பகல் இடம்பெறவுள்…

Image
பாராளுமன்றம் இன்று, முதல் முறையாக அரசியலமைப்புச் சபையாக கூடவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இன்று (05) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று (05) முதலாவது அமர்வு இடம்பெறுவதுடன், இதன்போது அரசியலமைப்புச் சபைக்காக 7 உபதலைவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அத்துடன் நடவடிக்கை குழுவுக்கு 21 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிப்பதுடன், அதனைத்தொடர்ந்து பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அரசியலமைப்புச் சபைக்கு சகல கட்சிகளையும் பிரதிநித்துவப்படுத்தி 7 உப தலைவர்கள் தெரிவாவதுடன், நடவடிக்கை குழுவிற்கான 21 பேரில் சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவர், நீதியமைச்சர் ஆகியோர் பதவி வழியாக அங்கத்துவம் வகிக்கவுள்ளனர்.
எதிர்வரும மே மாதம் முதல் அரசியலமைப்புச் சபை தொடர்ச்சியாக கூடி புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயவுள்ளது.

You may like these posts

Comments