தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு எதிர்வரும் எட்டாம் திகதி முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
புதுவருடத்தினை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி முதல், 14 ஆம் திகதிவரை விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
வழமையான போக்குவரத்து சேவைக்கு மேலதிகமாக விசேட பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் 24 மணித்தியாலங்களும் விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுவருடம் நிறைவு பெற்றதன் பின்னர் கொழும்புக்கு வருகைதரும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விசேட பஸ் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை,புதுவருட காலப்பகுதியில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மத்திய பஸ் தரிப்பிடத்தினை அண்மித்த பகுதயில் CCTV கமாரக்கள் செய்படுத்தப்படவுள்ளன.
CCTV கமராக்கள் பொருத்தப்பட்ட சுமார் 2000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை 12 மணித்தியாலங்களுக்கு முறைப்பாட்டு பிரிவு செயற்படும எனவும், 8 ஆம் திகதியிலிருந்து புத்தாண்டு நிறைவுபெறும் வரையில் 24 மணித்தியாலங்களுக்கும் முறைப்பாடடு பிரிவு இயங்கவுள்ளது.
0117 555 555 என்ற தெலைபேசி இலக்கத்தினூடாக பயணிகள் முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும் என எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!