தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஏப்ரல் மாத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், தகுதிபெற்ற 4,700 பேரை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்றிலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
இந்த மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2013 ஆம் ஆண்டின் பின்னர், கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், இதற்கான எதிர்ப்பார்ப்புடன் இருந்த மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!