நாளை மறுதினம் (21) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்கீழ் இல்லங்கள், பாடசாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இதுவரை டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்படுமாயின் வைத்தியரை உடனடியாக நாடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை 54 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் டொக்டர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை 27,696 நோயாளர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.