கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வாகனப் பதிவு அதிகரித்துள்ளதாக மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 611,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவு ஆணையாளர் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் 409,000 வாகனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கடற்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வாகனப் பதிவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.