தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் தற்போது நிறைவுற்றுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.