Contact Form

Name

Email *

Message *

த.தே. கூட்டமைப்பு வேட்பாளர் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும்  ஒருவர்  தன்னைத் தாக்கியதாக அரசாங்க அலுவலர் ஒருவர் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருக்…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும்  ஒருவர்  தன்னைத் தாக்கியதாக அரசாங்க அலுவலர் ஒருவர் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவரே முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை தான் கடமை முடிந்து கால் நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கல்முனை கடைத்தெருவில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த வேட்பாளர்   என்பவர் தன்னை வழிமறித்து முகத்தில் மூன்று முறை அறைந்து வயிற்றிலும் குத்திவிட்டு எச்சரித்து விட்டுச் சென்றதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பகைமை காரணமாகவே தன்மீது இந்த வேட்பாளர் தாக்குதல் நடத்தியதாக தாக்கப்பட்டவரான   தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You may like these posts