Contact Form

Name

Email *

Message *

வாக்கினைச் சிதறடிக்காமல் சிறந்த ஆளுமையையுடைய மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.

இதுவரை காலமும் போல தமது ஊரவன் உறவினன் என வாக்கினைச் சிதறடிக்காமல் சிறந்த ஆளுமையையுடைய சட்ட நோக்கங்கள் மக்களின் அபிலாசைகள் உரிமைக் கோரிக்கைகள் தெரிந்த தமிழரினது உரிமையினை வ…

Image
இதுவரை காலமும் போல தமது ஊரவன் உறவினன் என வாக்கினைச் சிதறடிக்காமல் சிறந்த ஆளுமையையுடைய சட்ட நோக்கங்கள் மக்களின் அபிலாசைகள் உரிமைக் கோரிக்கைகள் தெரிந்த தமிழரினது உரிமையினை வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.என அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி  சிந்தாத்துரை ஜெகநாதன் நேற்று மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசியத்திற்காக எனது தந்தை சிந்தாத்துரை பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ் உரிமைக்காக பாடுபட்ட தமிழ் தலைவர்களில் எனது தந்தை இடம் பிடித்துள்ளார். எனது தந்தையினது வழிகாட்டலிலும் தந்தை செல்வாவின் வழியிலும் இளவயதினிலே எனது அரசியல் பயணத்தினையும் சட்டப் பணியினையும் எம் மக்களுக்காககத் தொடங்கியிருந்தேன்.

எமது உரிமைகள் மறுக்கப்படுகின்ற போதிலும் வேறு இனத்தவர்களினால் எமது உடமைகள் பறிக்கப்படுகின்ற போதிலும் பல்வேறு இன்னல்களால் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் இனம் நசுக்கப்படுகின்ற இனமாக காணப்படுகின்றது. யுத்த வடுக்கள் இன்னும் ஆறவில்லை ஏக்கங்கள் நிறைவேறவில்லை. எமது மாவட்டத்தில் கல்வி கலாசாரம் வாழ்வாதாரம் உட்கட்டமைப்பு வேலைவாய்ப்பு போன்ற விடயங்கள் அபிவிருத்தி அடையவில்லை. எமக்கான தொழில் வாய்ப்புக்கள் முன்னைய அரசியல் வாதிகளால் விற்கப்பட்டன. வேறு இன அரசியல் வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றினைப் பெற்றுக் கொடுக்க போதுமான உபாயங்கள் நுட்பங்கள் தெரிந்த அரசியல் வாதிகள் எமது மக்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறான விடயங்களால் எமது தமிழ் மக்களது உரிமையை வென்றெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளேன். என்னை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது எனது மக்களின் கையிலே உள்ளது. இதுவரை காலமும் போல தமது ஊரவன் உறவினன் என வாக்கினைச் சிதறடிக்காமல் சிறந்த ஆளுமையையுடைய சட்ட நோக்கங்கள்இ மக்களின் அபிலாசைகள் உரிமைக் கோரிக்கைகள் தெரிந்தஇ தமிழரினது உரிமையினை வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.

மேலும் கோடி பணத்துடன் தமிழ் தேசியம் தமிழ் உரிமையென பாட்டன் முப்பாட்டன் கதை சொல்லிக் கொண்டு இறுதியில் எம் இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களது போலிப் பிரச்சாரங்களிலும் உசுப்பேத்தல்களிலும் ஏமாறாது சிந்தித்து வாக்களியுங்கள். எனது மக்களுக்காக சிறு சிறு கூட்டங்கள் நடத்தத் தீர்மானித்துள்ளேன். என்னை விரும்பும் இளம் உள்ளங்கள் புத்தி ஜீவிகள் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாட விரும்புகின்றேன். இதற்கான சந்தர்ப்பத்தினை அமைத்துத் தருமாறு என் மக்களிடம் அன்புக்கரம் நீட்டுகின்றேன்.

You may like these posts