பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பான அவசர முன்னெச்சரிக்கையொன்று இன்று (15) காலை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கைக்கு மேலாக மத்திய மலைநாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தினூடாக மணித்தியாலத்துக்கு சுமார் 70 - 80 கிலோமீட்டர்கள் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய அபாயமுள்ளதாக அத்திணைக்களத்தின் முன்னெச்சரிக்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக இலங்கையின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுமெனவும், இன்று (15) இரவுவேளையில் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.