( திருக்கோவில் தம்பி )
திருக்கோவில் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் பறவைகளை வேட்டையாடிவர் திருக்கோவில் காஞ்சிரம்குடாப் பகுதியில் வைத்து புதன்கிழமை நள்ளிரவு திருக்கோவில் போக்குவரத்து பொலீசாரால் ஓருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார.;
மேற்படி பறவைகளை மருந்துவத்தேவைக்கான எண்ணெய்களை தயாரிப்பதற்காகவும்,இறைச்சிக்காகவும் மயில்கள் மற்றும் பறைவைகளை வேட்டையாடியதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.
சந்தேசக நபர் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட உள்ளுர் தயாரிப்பு துவக்கையும் அதற்காக பயன்படுத்தப்படும் 90 சன்னங்களையும் வேட்டையாடப்பட்ட பறைவைகனையும் சந்தேசக நபரிடமிருந்து கப்பற்றப்பட்டதுடன் இவ்வாறு வேட்டையாடப்பட்ட பறவை ஒன்று வெளிநாட்டு ஆந்தை இனத்தைச் சேர்ந்த் பறவையெனவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்று காலை பொத்துவில் மாவட்ட நீதவான் நீதீமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாக திருக்கோவில் பொலீஸ் நிலைய பொறுப்பதிகார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
