(அ.சுமன்)
தேசிய மட்டத்தில் பரதநாட்டிய நடன முத்திரா போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மாணவி தர்மரெட்ணம் லுவேனுஜா அவர்களையும்,அவரை பயிற்றுவித்த நடன ஆசிரியை திருமதி.மதிவதனி பாலேந்திரகுமார் அவர்களுக்கும் கலாசார அமைச்சர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகதினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.அத்துடன் கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட 'நடன முத்ரா' போட்டியில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் மகா வித்தியாலய மாணவி த. லுவேனுஜாவுக்கு 'நடனத்தாரகை' எனும் பட்டத்தினை கலை, கலாசார அமைச்சர் ஏக்கநாயக்க வழங்கினார்.

