தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு.சிறிதரன் மற்றும் மட். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன். செல்வராசா மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்
அடுத்ததாக கூட்டமைப்பின் குழுவினர் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு ஊறணி என்ற இடத்தில் மீள்குடியேறிய மக்களைச் சந்தித்தனர். இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்த 22 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர். அப்போது இவர்களின் இந்த குடியிருப்புக்களில் இராணுவத்தினர் வந்து முகாமிட்டிருந்தனர். கடந்த 20 வருடங்களாக அங்கிருந்த இராணுவத்தினர் அண்மையில் அங்கிருந்து வெளியேறியதால் மீண்டும் அந்த மக்கள் தங்களின் இடத்திற்கு வந்து குடியேறி உள்ளனர். ஆனால் அவர்களுக்கான எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் அங்கு இல்லை. மேலும் சில சிங்களவர்கள் பல தடவைகள் அங்கு வந்து குடியேறிய அந்த தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு தங்களை அச்சுறுத்துவதாக அந்த மக்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
அடுத்ததாக அங்கிருந்து சாகாமம் என்ற இடத்திலுள்ள மீள் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அடுத்ததாக அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டனர் இந்த கூட்டத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டி அவர்கள் தலைமை தாங்கினார்.
People Of Thambiluvil & Thirukkovil
இதன்போது இன்று காலை 10.30 மணிக்கு திருக்கோவில் எனும் இடத்தில் உள்ள முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு அவர்களின் இல்லத்தில் ஒரு கூட்டமொன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.சபாபதி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகள் (காணி) பற்றியும் விரிவாக ஆராய்ந்தனர்
அடுத்ததாக அங்கிருந்து சாகாமம் என்ற இடத்திலுள்ள மீள் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அடுத்ததாக அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டனர் இந்த கூட்டத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டி அவர்கள் தலைமை தாங்கினார்.
People Of Thambiluvil & Thirukkovil



Comments
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!