நவராத்திரி நாளினிலே
அம்மா தாயே உலக காப்பவளே
இம் மாதம் வரும் நவராத்திரி நாளிதிலே
மும மூன்று நாட்கள் என வகுத்து வந்து
முப் பெரும் தேவிகளாய் அருள்புரிபவளே
கல்வியில் சிறந்தவர் யாரென்றும்
கண்ணியத்தில் சிறந்தவர் யாரென்றும்
செல்வத்தில் மிகுந்தவர் எவரேன்றும்
வீரத்தில் உயர்ந்தவர் யாரென்றும்
வீண்வம்பை சுமத்துபவர் யாரென்றும் அன்பு
செல்லாத இவ்வுலகில் உள்ளோர்க்கு
செய்திடு திறமை காண் பரீட்சைதனை
பண்போ டொழுக்கம பறந்தோடிப் போயிற்றெங்கோ
பார்வதியே இப் பாரைப் பாரது மீண்டு வர
உன்னிடத்தில் இல்லாத பொன் பொருளால்
உன்னையே விலை கொடுத்து வாங்கிடுவர்
பொன் விளையும் பூமியிலே இன்னுமிங்கு
போகவில்லை வறுமை மிகு அகதி நிலை
அன்பென்ற விலையிலா பொருளுமிங்கு
அடியோடு மறைந்து வெகு நாளாச்சு
இவ் இனிய நவராத்திரி நாளிதிலே நீ
இருந்து கொலு வீற்றிருக்கும் போதினிலே உன்
கண்ணிலே காணுகின்ற அவலங்களை நாங்களினி
காணாமல் செய்திடுவாய் சக்தி தாயே
-------------தம்பிலுவில் தயா
நன்றி - mailed by Parthipan ( G.S)
People Of Thambiluvil & Thirukkovil --- sent your article to us - thambiluvil@gmail.com
செல்வத்தில் மிகுந்தவர் எவரேன்றும்
வீரத்தில் உயர்ந்தவர் யாரென்றும்
வீண்வம்பை சுமத்துபவர் யாரென்றும் அன்பு
செல்லாத இவ்வுலகில் உள்ளோர்க்கு
செய்திடு திறமை காண் பரீட்சைதனை
பண்போ டொழுக்கம பறந்தோடிப் போயிற்றெங்கோ
பார்வதியே இப் பாரைப் பாரது மீண்டு வர
உன்னிடத்தில் இல்லாத பொன் பொருளால்
உன்னையே விலை கொடுத்து வாங்கிடுவர்
பொன் விளையும் பூமியிலே இன்னுமிங்கு
போகவில்லை வறுமை மிகு அகதி நிலை
அன்பென்ற விலையிலா பொருளுமிங்கு
அடியோடு மறைந்து வெகு நாளாச்சு
இவ் இனிய நவராத்திரி நாளிதிலே நீ
இருந்து கொலு வீற்றிருக்கும் போதினிலே உன்
கண்ணிலே காணுகின்ற அவலங்களை நாங்களினி
காணாமல் செய்திடுவாய் சக்தி தாயே
-------------தம்பிலுவில் தயா
நன்றி - mailed by Parthipan ( G.S)
People Of Thambiluvil & Thirukkovil --- sent your article to us - thambiluvil@gmail.com

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!