Contact Form

Name

Email *

Message *

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக திருக்கோவி…

Image
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில், மண்டானை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய தம்பிமுத்து துஷாந்தன் என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். பொத்துவில் நோக்கிச் சென்ற டிப்பர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இவரை சுமார் 82 மீட்டர் துரம் வரை இழுத்துச் சென்றதில் இவர் உயிரிழந்துள்ளார்.

 டிப்பர் சாரதியைக் கைதுசெய்துள்ள திருக்கோவில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts