Contact Form

Name

Email *

Message *

உலகாளப் போகும் லை-பை (Li-Fi) தொழில்நுட்பம்

அதிவேக இணையப் பயன்பாட்டிற்காக அறிமுகமாகியுள்ள லை-பை (Li-Fi) தொழில்நுட்பம் பாரியதொரு வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படும் ஒளிக்கற்றைகளின் மூலம் இண…

Image
அதிவேக இணையப் பயன்பாட்டிற்காக அறிமுகமாகியுள்ள லை-பை (Li-Fi) தொழில்நுட்பம் பாரியதொரு வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.
கண்ணுக்குப் புலப்படும் ஒளிக்கற்றைகளின் மூலம் இணையப் பாவனைக்கான ஒரு புதிய தொழில்நுட்பம் தான் இந்த லை-பை.
இது ‘வை-பை’ (Wi-Fi) ஐ விட 100 மடங்கு வேகமாக செயல்படக்கூடியது. வை-பையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளைக் காட்டிலும் லை-பை 10 ஆயிரம் மடங்குகள் பெரிதாகும்.
லை-பை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண எல்.இ.டி. மின்விளக்கு, இணைய இணைப்பு மற்றும் போட்டோ டிராக்டர் ஆகியவை போதும்.
ஒரு வினாடிக்கு 1 ஜி.பி. வரையிலான வேகத்தில் இணையப் பயன்பாட்டைப் பெற லை-பை தொழில்நுட்பம் வகை செய்கிறது.
ஒளிக்கற்றை வாயிலான இந்த லை-பை இணையப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம், சோதிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லை-பை அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் சென்றடையும் என அதனை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வை-பை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால் அதை மருத்துவமனைகள், விமானங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது.
லை-பை தொழில்நுட்பம் மூலம் அந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம் என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்டு ஹாஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
வீட்டில் உள்ள வை-பை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள் ஒரு காரணம்.
வெளிநாடுகளில் டிசம்பர் மாதத்தில், குறிப்பாக பெரும்பாலானோரின் வீடுகளில் வை-பை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம், வீடுகளில் உள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்படும் எல்.இ.டி. மின்விளக்குகள்தான் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

You may like these posts