முதியோர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்துவத்தின் பயன்பாடுகள், அதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் S.ஜெகராஜன் ஐயா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.இதன் போது முதியோர்களின் சுகாதாரம், ஆயுர்வேத மருத்துவத்துவத்தின் பயன்பாடுகள், அதன் அவசியம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது இதில் வளவாளர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டனர்.



