Contact Form

Name

Email *

Message *

அரச வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இன்று நண்பகலுக்கு பின்னர் கைது

அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் கடமை நிமித்தம் கையளிக்கப்பட்ட வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள், பிரதியமைச்சர்களை இன்று (11) நண்பகலுக்கு பின்னர் கைது செய்யுமாறு சிரேஷ்ட ப…

Image
அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் கடமை நிமித்தம் கையளிக்கப்பட்ட வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள், பிரதியமைச்சர்களை இன்று (11) நண்பகலுக்கு பின்னர் கைது செய்யுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்டளையிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் நேற்று  (10) நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தற்பொழுது பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தி அனுமதி பெற்றுக்கொள்ள
இன்று நண்பகல் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாத வாகனங்களை தேர்தல் நடவடிக்கையில் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவே ஆணையாளர் இவ்வாறு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் பக்கச் சார்பாக ஒளிபரப்பப்படும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், குறிப்பிட்ட குற்றம் நிரூபணமாகும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may like these posts