பாராளுமன்றத் தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 70500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை வீரர்களின் உதவிகளும் பெறப்படவுள்ளன. வாக்குச் சாவடிப் பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.