Contact Form

Name

Email *

Message *

தமிழ் மக்­க­ளுக்­கான பணியை தொடர்வேன் - முன்னாள் எம்.பி. சந்­தி­ர­காந்தன்

பாட்டன், தந்தை விட்­டுச்­சென்ற இடத்­தி­லி­ருந்து எனது தமிழ் மக்­க­ளுக்­கான பணி­களை தொட­ர­வுள்ளேன் என முன்னாள் தமிழ் தேசிய கூட்­டமைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரியநாயகம் …

Image
பாட்டன், தந்தை விட்­டுச்­சென்ற இடத்­தி­லி­ருந்து எனது தமிழ் மக்­க­ளுக்­கான பணி­களை தொட­ர­வுள்ளேன் என முன்னாள் தமிழ் தேசிய கூட்­டமைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரியநாயகம் சந்­தி­ர­நேரு சந்­தி­ர­காந்­ன் தெரி­வித்தார்.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்­திற்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்கள் கடந்த யுத்­த­கால வடுக்­க­ளிலி­ருந்து இன்னும் மீண்டு கொள்ளவில்லை. அவர்­களின் கல்வி, கலா­சாரம், சுகா­தாரம், வாழ்­வா­தாரம் உட்­கட்­ட­மைப்பு என அத்­தனை விட­யங்­களும் மிகவும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

மேலும் காணாமல் போன­வர்கள், கடத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு இது­வ­ரையில் எந்த தீர்வும் வழங்­கப்­ப­டாத நிலையில் இவ்­வா­றான குற்­றங்­களைச் செய்­த­வர்கள் இந்த நல்­லாட்­சி­யிலும் சுதந்­தி­ர­மாக உலா­வு­கின்­றனர்.

எனவே எதிர்­வ­ரு­கின்ற பொதுத்­தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்­பாக போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னுவை \சமர்ப்­பித்­துள்ளேன். போட்­டி­யி­ட­வுள்ள என்னை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வு­செய்யும் பொறுப்பு தமிழ்­மக்­களின் கைக­ளி­லேயே உள்­ளன.

தமிழ்­மக்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள், அபி­வி­ருத்­திகள், வாழ்­வா­தார உத­விகள், இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­துடன் காணாமல் போன­வர்கள், கடத்­தப்­பட்­ட­வர்களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முடி­வு­கட்டும் வகையில் குற்­ற­வா­ளி­களை கண்­ட­றி­வ­தற்­கான சட்ட நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வுள்ளேன்.
வாக்­க­ளிக்கும் விட­யத்தில் இன்று தமிழ் மக்கள் நல்­ல­தொரு நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். இருந்த போதும் எதிர்­வ­ரு­கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சகோதரர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று தமது வாக்குகளை அளித்து வாக்களிப்பு வீதத்தை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


You may like these posts