Contact Form

Name

Email *

Message *

முன்பள்ளி பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன

(திருக்கோவில்   தம்பி) அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் முன்பள்ளி பாடசாலைகளில் கல்முனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று,திருக்கோவில் பொத்துவில் ஆகிய ஐந்து கல்வி வலயத்துக்குற்ப…

Image
(திருக்கோவில்   தம்பி)
அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் முன்பள்ளி பாடசாலைகளில் கல்முனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று,திருக்கோவில் பொத்துவில் ஆகிய ஐந்து கல்வி வலயத்துக்குற்பட்ட 12 முன்பள்ளி பாடசாலைகளுக்கு  சுமார் 2இலட்சத்தி நாற்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவ் விளையாட்டு உபகரணங்களை பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன்  கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் முன்பள்ளி ஆசிரியர்களின் நிலைமைகள் தனக்கு நன்கு தெரிவதாகவும் இவர்களுக்கான நியமனங்கள் மற்றும் கொடுப்பணவுகள் சம்மந்தமாக ஆராய்யப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலைகளின் இணைப்பாளர் ஏ.எல்.இப்றாஹிம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்pல் கிழக்கு மாகாணத்தின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம்,திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.சுகீர்தராஐன் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் கண.இராஐரெத்தினம பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசீத்;  பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் பல திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு விளையாட்டு உபகரங்களை வழங்கி வைத்தனர்.

 




You may like these posts