(அ.சுமன்)
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை அபிவிருத்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.இந்த கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜையில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது, குறித்த ஆலயத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.
