(திருக்கோவில் தம்பி)
கிழக்கிலங்கையின் பழம்பெரும் வரலாற்று சிறப்பு கொண்ட முருகன் ஆலயமான உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் முருகப்பெருமானுக்குகந்த திருநாளான தைபபூசத்தை முன்னிட்டு இம்முறை மிகவிமர்சியாக கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய திருப்பணிச் சபையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் வள்ளிமலையில் இருந்து பக்தர்களின் பாற்குட பவனி ஆரம்பமாகி முருகன் சன்னிதானத்தை வந்தடைந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் எனும் சிறப்பு வழிபாடும் இங்கு இடம்பெற்றும் அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ஸ்நபனஹோமம் திரலிய ஹோமம் பாலாபிஷேகம் என்பன இடம்பெறுவதுடன் மாலையில் விசேட அலங்கார பூஜையும் திருவிளக்கு சுவாமி உள்விதி உலாவும மற்றும் பஐனையும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.இங்கு கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சிதாராம் குருக்கள் அவர்களின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
பூசம் அல்லது புஷ்யம் என்பது நமது சோதிடர்கள் கூறும் 27 நட்சத்திர மண்டலங்களுள் எட்டாவதாகும்.தைத்திங்களில் பூச நட்சத்திரம் வரும் நாள் புண்ணிய நாளாக இந்துக்களால் கொண்டாடப்புடுகிறது.தைப்பூச நாள் பெரும்பாலும் நிறைமதிநாளாக இருக்கும் தேவர்களின் குருவாகிய பிருகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை என்பர்.பிருகஸ்பதி அறிவின் தேவதை என இந்துக்கள் நம்புவதால் பூசநட்சத்திரத்தை வணங்கினால் பிருகஸ்பதியின் அருள் கிடைக்கும் என்பர் இவ்தினம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பான பூiஐ வழிபாடுகள் இடம்பெறும்.
