இவ் ஊர்வலம் திருக்கோவில் சுகாதார பணிமனைக்கு முன்பாக வேள்ட் விஷன் நிறுவன திட்டப் பணிப்பாளர் கிறிஸ்ரி ஜெயானந்தன் தலைமையில் ஆரம்பமாகி தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.பின்னர் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் திருக்கோவில் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர் திருமதி இரா.சுலோச்சனா,வலயக் கல்வி உதவிப் பணிப்பாளர் திருமதி க.திலகவதி,திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தவராஜா,வேள்ட் விஷன் பொத்துவில் முகாமையாளர் ஐ.மைக்கல்,பிரதேச பாடசாலை மாணவர்கள்,பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள்,குடும்ப நல தாதிகள் மற்றும் ஆசிரியர்கள்,வேள்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர்கள் என பெரும் திரளானோர் போஷாக்கு உணவு வகைகள் பற்றிய பதாதைகளை தாங்கியவாறு விழிப்புணர்வில் ஊர்வலமாகச் சென்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!