பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட முகாமைத்துவப் போட்டியில் கிராம சேவை உத்தியோகத்தரின் அலுவலகம்,சுற்றுப்புறச்சூழல்,மக்களுடனான தொடர்புகள்,திருப்திகரமான சேவை வழங்குதல் ,செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படல்,மற்றும் கிராம மட்ட அனைத்துத் தகவல்களும் வைத்திருத்தல் போன்றனவற்றை அடிப்படையாக வைத்தே இப் போட்டி நடத்தப்படுகின்றது.
அதற்கு அமைய திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கிடையேயில் நடத்தப்பட்ட அலுவலகமுகாமைத்துவப் போட்டியில் தாண்டியடி பிரிவிற்குரிய கிராம சேவை உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி பார்த்திபன் 170 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்று மாவட்டமட்டப் போட்டிக்குத் தெரிவானார். அதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தில் 514 கிராம அலுவலர்களிடையே போட்டியிட்டு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்.தேசிய மட்டத்தில்14022 கிராம அலுவலர்களிடையே போட்டியிட்டு தேசிய மட்டத்தில் ஆறாவது இடத்தினை Merit தரத்தில் சித்தி பெற்று ஜனாதிபதி விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.

கடந்த 2011 - 11 - 26 ம் திகதி பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் காலை 10.00மணிக்கு அலரி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விருதும்,சான்றிதழ்களுடன் ,கணணிகளும் வழங்கப்பட்டதுடன். மதிய போசனவிருந்தும் ஜனாதிபதியால் அளிக்கப்பட்டது.
எமது வாழ்த்துக்கள் .
எமது வாழ்த்துக்கள் .
போட்டோக்களை பெரிதாக பார்ப்பதற்கு போட்டோ மீது கிளிக் செய்யுங்கள்
மேலதிக புகைப்படங்களுக்கு முகவரி

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!