(திருக்கோவிலதம்பி;)
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வறுமையற்ற இலங்கைத் தேசத்ததை உருவாக்குவோம் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு .
அதிமேதகு ஐனாதிபதியினால் இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வறுமையற்ற இலங்கைத் தேசத்ததை உருவாக்குவோம் என்ற சிந்தனைக்கு வலுவூட்டும் நோக்குடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு 17 ம் திகதி (வியாழன்) திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ் செயலமர்வுக்கு சுமார் 350க்கு மேற்பட்டோர் பங்குபற்றி இருந்தனர்.
இச் செயலமர்வானது ஒவ்வெறு குடும்பமும் வறுமையற்ற தன்னிறைவான பொருளாதாரத்தில் மேலோங்கி வாழ்வதற்கான விழிமுறைகளை கற்றுக்கொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகின் கருத்து கணிப்பின் முடிவில் ஒரு மனிதன் வறுமையானவனாக வாழ்வதற்கு காரணம் அவனிடம் காணப்படும் முயற்சியின்மையும் சோம்பேறித்தனமும் மற்றும் தேடல் இன்மையும் முதன்மை காரணங்களாக அமைகின்றன.
இதனை நிவர்த்தி செய்து தன்னிடமுள்ள சிறிய மூலதனத்தை அல்லது வளத்தை கொண்டு தனது கடின உழைப்பின் மூலம் வளங்களை இனம் கண்டு காலத்துக்கு ஏற்ற விதத்தில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வழிமுறைகள் சம்மந்தமான கருத்துக்கள் இங்கு ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் மாவட்ட திட்ட மிடல் பணிப்பாளர் எஸ் அன்வர்டீன் பிரதேச செயலாளர் எம் கோபாலரெத்தினம் ஆகியோர் உரையாற்றுவதையும் மற்றும் மாவட்ட பிரதேச உதவி திட்ட பணிப்பாளர்களையும் கலந்து கொண்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் கிராம தலைவர்களையும் படத்தில் காணலாம் -(படம் திருக்கோவில் தம்பி);






