(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் கல்வி வலயத்தினால் சுனாமி அனர்த்தத்தின் பின் மீள் குடியற்றப்பட்ட கிராமமான மண்டானை கிராமத்தில் திகோ/மண்டானை தமிழ் கலவன் பாடசாலை எனும் புதிய பாடசாலை வித்தியாரம்ப நாளான 18ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன். அன்று 26 மாணவர்களும 01ம் தரத்துக்கு சம்பிரதாய பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
கடந்த 6 வருடங்களாக இம் மண்டானை கிராமத்தில் இருந்து 180 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் சுமார் 5-10 கி.மி தூரத்தில் உள்ள தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் விநாயகபுரம் ஆகிய பாடசாலைகளுக்கு பஸ் மூலம் மிகவும் சிரமப்பட்டு பிரயாணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தரம் 01க்கு மேல் கல்விகற்கும் மாணவர்களுக்கு தொடர்ந்தும் காணபடுகின்ற போதிலும் எதிர் காலத்தில் ஏனைய மாணவர்களும் கல்வி கற்க கூடிய நிலைமை ஏற்படலாம். இதற்கு அக்கிராமத்து மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கையில் தான் பாடசாலையில் நிலைத்திருத்தல் தன்மை தங்கியுள்ளது.போன்ற கருத்துக்களை அக்கிராமத்து நலன்விரும்பிகள் முன்வைத்தனர்.இவ் பாடசாலை ஆரம்ப விழாவானது திருக்கோவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளான அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கிழக்கு மாகாண சபை முன்னைநாள் அமைச்சரும் தற்போதய உறுப்பினருமான கலாநிதி டி.நவரெட்ணராஜா அம்பாறை மாவட்ட ஐனாதிபதியின் இணைப்பாளர் கலாநிதி கே. புஸ்பகுமார்(இனியபாரதி) ஆகியோருடன் கௌரவ அதிதகளான திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஐன் ஆகியோரும் கலந்து கொண்டு திகோ/மண்டானை தமிழ் கலவன் பாடசாலையை ஆரம்பித்து வைத்தனர்










