(தம்பையா)திருக்கோவில் பிரதேச வயலில் புதையல் தோண்டி எடுத்த பல இலச்சம் ரூபா பெறுமதியான தங்கஆபாரணங்கள் மற்றும் தங்கபுத்தசிலை, வைரங்கள், புத்த இலச்சனை போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை இன்று செவ்வாய்க் கிழமை (27) மாலை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் தெரிவித்தார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 பேரை பொலிசார் கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் புதையலில் எடுக்கப்பட்ட பல இலச்சம் ரூபா பெறுமதியான தங்கஆபாரணங்கள் மற்றும் தங்கபுத்தசிலை, வைரமுத்துக்கள் ,வைரங்கள், இரத்தினகற்கல் ,
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிகவிசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை புதையல் தோண்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் நேற்று திங்கட்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில்; நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆயர்படுத்தியபோது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது









