Contact Form

Name

Email *

Message *

மனம் கொள்ளைகொண்டவன்..

வண்ணக் குடைபிடித்து....பக்தர் எண்ணங்கள் நன்கறிந்து... வெள்ளைக்குதிரையிலே வாறான்.. முருகன்..வாறான் -மனம் கொள்ளைகொண்டுதானே போறான்..... வேலன்..போறான்... தென்னம்பொழில் சூழ்ந்த…

Image

வண்ணக் குடைபிடித்து....பக்தர்
எண்ணங்கள் நன்கறிந்து...
வெள்ளைக்குதிரையிலே வாறான்..
முருகன்..வாறான் -மனம்
கொள்ளைகொண்டுதானே போறான்.....
வேலன்..போறான்...

தென்னம்பொழில் சூழ்ந்த
திருக்கோவில் பதியினிலே...
தன்னந்  தனிமையிலே   வந்தான்..-அவன்
வேலெறிந்து சூரனையே கொன்றான்...அவனை
சேவலும் மயிலுமாக கொண்டான்..தன்
பக்கத்திலே இருத்திக் கொண்டான்.....

ஆறுநாட்கள் கந்தசஷ்டி..
விரதம் பிடித்திருந்த...
அடியவர்க்கு அன்பையள்ளி தந்தான் -அவன்
அழகாக எழுந்தருளி நின்றான்.....அவன்
அரோகரா கோஷத்திலே மகிழ்ந்தான் -முருகன்
அனைவரையும் அருள்கூர்ந்து பார்த்தான்....

You may like these posts