| எமது வாழ்த்துக்கள் 2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். |
| இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை கடவுளின் துணை இல்லாவிட்டால் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்றிருக்க முடியாது. எனவே, இப்பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள ஒத்துழைத்த சகலருக்கும் நான் நன்றி கூறுகின்றேன் என்று நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்த மாணவி மாளவன் சுபதா தெரிவித்தார். 193 புள்ளிகளுடன் சித்தியடைந்துள்ள இவர், தம்பிலுவில் அம்மன் கோவில் முன் வீதியில் வசித்துவரும் மாளவன் உமையாள் தம்பதிகளின் புதல்வியாவார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவேன் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. நன்றாகப் படித்து, முயற்சி செய்ததன் பலனாக இப்பெறுபேறு கிடைத்துள்ளது. இப்பரீட்சையில் தோற்றி சிறப்பாக சித்தியடைவதற்கு எனது பெற்றோர், அதிபர், ஆசியர்கள் மற்றும் ஊக்கமளித்த சகலருக்கும் நன்றி கூறுகிறேன். இவ்வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொண்ட பெறுபேறுகளின்படி அடுத்த ஆண்டுக்கான தரம்-06 அனுமதியை பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் பெறுகின்றமைக்கு வழிகாட்டியாக மாவட்ட அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகளையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தமிழ்மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு மாவட்டம் வெட்டுப்புள்ளி கொழும்பு 145 கம்பஹா 145 களுத்தறை 145 கண்டி 145 மாத்தளை 145 நுவரேலியா 140 காலி 145 மாத்தறை 145 ஹம்பாந்தோட்டை 137 யாழ் 142 கிளிநொச்சி 139 மன்னார் 141 வவுனியா 143 முல்லைத்தீவு 139 மட்டக்களப்பு 142 அம்பாறை 143 திருகோணமலை 142 குருநாகல் 145 புத்தளம் 141 அநுராதபுரம் 140 பொலன்னறுவை 138 பதுளை 141 மொனராகலை 143 இரத்தினபுரி 140 கேகாலை 145 |
5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தம்பிலுவில் மாணவி முதலாமிடம் -
எமது வாழ்த்துக்கள் 2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன்…

Comments
Excellent - thank GOD
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!