இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி ஊடாக இவ்விடயம் வளிமண்டலவியல் திணைக்களத்தை ஆதாரம் காட்டி இலங்கை நேரம் 2 மணியளவில் வெளியிடப்பட்டதுடன், 2.40 அளவில் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அபாய நிலைஇருப்பதாகவும் க்ரையோரப்பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு என்று வலி மண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளதாகவும் கேட்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் அந்தமான்,நிகோபார் தீவுகளில் சற்று முன்னர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கைக் கோபுரத்தின் ஊடாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அறிவித்தலும் விடுக்கப்பட்டதை அடுத்து எமது தம்பிலுவில் திருக்கோவில் கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்திருப்பதுடன், கடலுக்கு அண்மையிலுள்ள மக்கள் உட்பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
பொலீஸார் பாதுகாப்பு அறிவிப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மக்கள் வீதிகளில் குழுமியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நேரம் பசுபிக் சுனாமி அவதானிப்பு நிலையமும் இப்பாரிய நிலநடுக்கமானது சுனாமியை ஏற்படுத்தும் என வெளியிட்டுள்ளது.
இச்சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது, இந்தியா நிகோபர் தீவுக்கு அண்மையில் இன்று இந்திய நேரப்படி இரவு 7:27 க்கு , 7.7 வடக்காகவும், 91.8 கிழக்காகவும் ஏற்பட்டதாகவும், 7.6 மக்னிரியூட் அளவில் அமைந்ததாகவும் இதனால் சுனாமி அறிகுறி மிகவும் காணப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகளின் கரையோரப்பகுதி மக்களை அவதானமாகவும் இருக்குமாறு அவதானிப்பு நிலையங்கள் கேட்டுக்கொள்கின்றன.
இவ்வேளையில் கொழும்பில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டடங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்தினை உணர்ந்த மக்கள், கட்டிடங்களை விட்டு வீதியில் நின்றதாக கொழும்பு பகுதி மக்கள் தெரிவித்த போதிலும், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மக்கள் வெளியேறத்தேவை இல்லையென்றும் கூறப்படுகின்றது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!