அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் 28.052017 நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவ தினத்தன்று இரவு கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த தருணம் காட்டு யானை வீட்டின் பின்புறமாக வந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போதே 55 வயதான முத்துப்பிள்ளை மகேஸ்வரி என்பவர் உயரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!