ஏழு பிரதினிதிகளை தெரிவு செய்வதற்காக, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி அமைச்சர் பீ.தயாரட்ன தலைமையிலும்,ஜக்கிய தேசிய முண்ணனி தயா கமகே தலைமையிலும், ஜனனாயக தேசிய முன்னனி முன்னாள் ஜே.வீ.பி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ தலைமையிலும் தத்தமது வேட்புமனுக்களை அம்பாரை கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ரீ.எம்.வீ.பிகட்சி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியன நேற்று முன்தினம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஆளும் ஜக்கிய சுதந்திர முன்னனியில் பீ.தயரட்ன,பேரியல்அஷ்ரப், ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அப்துல் பஷீர்,சரத்பியங்கர வீரசேகர, டீ.ஆர். சாந்த பிரேமரட்ன,கே.புஷ்பகுமார், சிரியானி விஜய விக்கிரம, ஏ.எம்.எம் நௌஷாட்.ஆகியோரும் ஜக்கிய தேசியக்கட்சியின் சார்பில் பீ.கே. தயா கமகே, எம்.சி.பைஸால் காசிம்,சி. கலபத்தி, அசேக குமார பதகும்பர. எம்.ஏ. ஹஸனலி,வசந்த ராஜபிள்ளை தயானந்தராஜா, எம்.எம்.எம்.முஸ்தபா,எம்.ஜ.எம். மன்சூர், எம். நயிமுல்லாஹ்,எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரும் போட்டி இடுகின்றனர்.
இதில் 3 சுயேட்சைக் குழுக்களினதும். ஒரு அரிசியல் கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்திலும்.ஜே.வீ.பி ஜனனாயக தேசிய முன்னனியிலும் போட்டி இடுகின்றமை குறிப்பிடத்தக்கது
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!