Contact Form

Name

Email *

Message *

வானிலை அறிவித்தல்

கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா எனும் பெயர் சூட்டப…

Image
கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் தற்போது நிலைகொண்டுள்ளது.

இது தற்போது மணித்தியாலத்திற்கு 12 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூறாவளியானது மேலும் வலுவடைந்து வங்காளதேசத்தின் கரையோரத்தை நாளை (30.05.2017) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணத்தினால் இலங்கையின் சில பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இடையிடையே சற்றுப்பலமான காற்றும் வீசக்கூடும். முக்கியமாக மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும் இலங்கைத்தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.

You may like these posts

Comments