[BY-NR]திருக்கோவில் பிரதேச சுவாட் முன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நட்டத்தும் பாலர் விளையாட்டு விழா நிகழ்வானது சுவாட் திருக்கோவில் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தி ஜீவகுமார் அவர்களின் தலைமையில் 28.03.2017 செவ்வாய்க்கிழமை நேற்றைய தினம் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன், பொத்துவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.இரவீந்திரன், அதிதிகளாக சுவாட் அமைப்பின் தலைவர் பரமசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியாக இணைப்பாளர் திரு.P.மோகனதாஸ், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.க.கங்காதரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
நடுவர்களாக ஓய்வுநிலை கொட்டக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ். தவராசா மற்றும் சேவைக்கால ஆலோசகர் திருமதி எம்.விக்னேஸ்வரன், மற்றும் அதிபர்களான திரு.எஸ்.தர்மசீலன், திரு. வி.செம்பற்சோதி, திரு. ஜெ. வசந்த இந்திரசிறி மற்றும் ஆசிரியர்களான செல்வி.ரி.தவமதி, திருமதி யு. தயாளசிங்கம், திருமதி. வி.குமார், திருமதி கே.கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இப்போட்டியில் திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் அன்னை பாலர் பாடசாலை, அம்மன் பாலர் பாடசாலை, சரஸ்வதி பாலர் பாடசாலை, காந்தி பாலர் பாடசாலை, சாயி பாலர் பாடசாலை, விபுலானந்தா பாலர் பாடசாலை, நாமகள் பாலர் பாடசாலை ஆகிய பாலர் பாடசாலைகள் இதில் கலந்து கொண்டன.












































































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!