
[BY-NR]
திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியம் மற்றும் சக்தி சனசமூக நிலையம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின பேரணியும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வானது 28.03.2017 செவ்வாய்க்கிழமை இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச சமூக தரிசன ஒன்றிய இணைப்பாளர் திருமதி வி. ரஜனி தலைமையில் svo நிறுவன காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக மகளீர் தின பேரணியானது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி svo காரியாலயத்தில் நிறைவடைந்தது. மேலும் இதன் பொது இளம் பெண் முயற்சியாளர்கள் கோரவிக்கப்படதுடன், மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு பகிர்த சுகிர்த சர்மா ஐயா அவர்களும் மற்றும் குடிநில மக்கள் தேவசபை போதகர் வண ரி.எஸ்.ஜெயமலர், ஆகியோரும் பிரதம அதிதியாக
அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.M.இராஜேஸ்வரன் மற்றும் விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். ஜெயரூபன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திரு ஏ.சுந்தரகுமார் மற்றும் ஓய்வு நிலை வலயகல்வி பணிப்பாளர் திருமதி திலகவதி கணேசமூர்த்தி அவர்களும் மற்றும்
சிறப்பு அதிதிகாளாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.கே. பண்டார மற்றும் கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர் திரு.கே.ஜெயசிறில் அவர்களும் மற்றும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் மற்றும் அம்பாறை சமூக சிற்பிகள் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் திருமதி மாலதி மனோகரன் மற்றும் திருக்கோவில் பிரதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் தலைவர் திரு.பி.நந்தபாலு திருக்கோவில் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்து உத்தித்யோகத்தர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!